ஆசையாக அப்பா வாங்கி தந்த செல்போன்… உடைந்ததால் மாணவி தற்கொலை!
கோவை மாவட்டம் அன்னூரில் ஆன்லைன் வகுப்புகளுக்காக தந்தை வாங்கித் தந்த செல்போன் உடைந்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குப்பனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. கூலி வேலை பார்க்கும் இவர் தனது மகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்து புதிதாக ஒரு செல்போன் வாங்கி தந்துள்ளார்.
ஆனால் மாணவி தாரணி அந்த செல்போனைக் கைதவறி கீழே போட்டு உடைத்துள்ளார். இது அப்பாவுக்கு தெரிந்தால் மிகவும் கோபப்படுவார் என நினைத்து தாரணி நேற்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் உடல் கிணற்றில் மிதந்ததை அடுத்து இதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து இது சம்மந்தமாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.