1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 ஜனவரி 2024 (08:06 IST)

தமிழகம் வருகிறார் கார்கே.. திமுகவிடம் கூடுதல் இடங்கள் கேட்டு பெறுவாரா?

Mallikarjun Kharge
கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் தலைவர் கார்கே தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியா கூட்டணி பிரச்சனையில்லாமல் இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என கடந்த தேர்தலில் அறிவித்தார். 
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் தலைவர் கார்கே  தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த  தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதல் தொகுதி கேட்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தொகுதிகளை விட குறைவாக கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் தொகுதிகளை கார்கே பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva