1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 மார்ச் 2021 (08:01 IST)

பொய்யும் புரட்டும் கலந்த முழு சந்தர்ப்பவாதி: வைகோவை கடுமையாக விமர்சனம் செய்த நடிகை

பொய்யும் புரட்டும் கலந்த முழு சந்தர்ப்பவாதி வைகோ என நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு நேற்று 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன அதுமட்டுமின்றி அந்த 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து பாஜக பிரபலம் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
ஊருக்கு கடவுள் மறுப்பு கொள்கை பேசிவிட்டு குடும்பத்தோடு மதம்மாறி மக்களை ஏமாற்றினீர்கள்,, திமுகவில் இருந்து விலகி  ஈழ தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் திமுக துரோகம் செய்துவிட்டது என கிளம்பி ,தனி சின்னத்தில் தான் போடியிடுவேன் என தொண்டர்களை ஏமாற்றிவிட்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முடிவெடுத்துள்ள வைகோ அவர்களே பொய்யும் புரட்டும்  கலந்த முழு  சந்தர்ப்பவாதி நீங்கள்.உங்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் ஆன்மாக்கள் உங்களை மன்னிக்காது