திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2017 (10:14 IST)

இயக்குனர் கவுதம்மேனன் சென்ற கார் லாரி மீது மோதி விபத்து

கோலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் சென்ற கார் திடீரென டிம்பர் லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
 
தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களை இயக்கி வரும் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இன்று சென்னை செம்மஞ்சேரி அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இயக்குநர் கவுதம் மேனன் சென்ற கார் மீது டிப்பர் லாரி ஒன்று எதிர்பாரதவிதமாக மோதியது
 
இந்த விபத்தில் கவுதம் மேனன் சென்ற கார் நொறுங்கியது. இருப்பினும்  அவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.