1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 1 ஜூலை 2017 (15:18 IST)

கதிராமங்கலம் எண்ணை கசிவு எதிரொலி; மெரினாவில் திடீர் போராட்டமா? போலீஸ் குவிப்பு

கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளனர்.


 

 
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலம் பகுதியில் ஓ.என்.ஜி.சி சார்பில் 7 எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி வயல்களில் ஓடியது. 
 
உடனே கிராம மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சிலர் எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தில் தீ வைத்தனர். இதனால் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீ வைத்தவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
 
இந்நிலையில் கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தப் போவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மெரினா கடற்கரையில் கூடுதலாக 200 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.