திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 மே 2023 (17:12 IST)

குப்பை கொட்டுவதில் தகராறு.... 6 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

madhyapradesh
மத்திய பிரதேசத்தில் மொரீனா மாவட்டம் லேபா எனும் கிராமத்தில்  குப்பை கொட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில்  6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச  மா நிலம் மொரீனா மாவட்டம், லேபா எனும் கிராமத்தில் வசிதிது வரரும் கஜேந்திர சிங் மற்றும் தீர் சிங் ஆகிய இரு குடும்பத்தினரிடையே கடந்த  2013 ஆம் ஆண்டு  முதல் குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.

இன்று காலையில் இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இடையே தகரராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கஜேந்திர சிங்கின் வீட்டை, தீர் சிங் ஆயுதனங்களால் தாக்கினார்.

இதில், கஜேந்திர சிங் குடும்பத்தைச் சேர்ந்த  மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேரை தீர் சிங் குடும்பத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

மேலும், இருவர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தக் கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவுவதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள் தப்பியோடப்பட்ட நிலையில்,  அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.