1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (18:18 IST)

வேகமெடுத்த கஜா புயல்: நாளை மாலை என்ன நடக்கும்?

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நேற்று திசைமாரிய காரணத்தால் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே கரையைக்கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
நேற்று மற்றும் இன்று தனது வேகத்தில் சற்று தளர்ந்த கஜா புயல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களிலும், புதுச்சேரியின், காரைக்கால் மாவட்டத்திலும் நாளை, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொறுத்த வரை, நாளை காலை முதல், மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும். மேலும், புயலால் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.