1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 13 நவம்பர் 2018 (17:54 IST)

கஜா புயல் அப்டேட்: ரூட் ஃபிக்ஸ் - மழை எப்படி?

கஜா புயல் நெருங்கி வருவதால் அதன் தாக்கம் இன்னும் 24 மணி நேரத்தில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்லது. மேலும் அதன் பாதை, கடலூர் -  பாம்பன் பாலம் இடையே இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஆம், தென்மேற்கு திசையில் நகர்ந்து வரும் புயல் நவம்பர் 15 ஆம் தேதி அன்று பிற்பகலில் பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
புயல் கரையை கடக்கும் வரை தஞ்சை, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். 
 
சென்னையை பொருத்தவரை 15, 16, 17 தேதிகளில் மிதமான மழை இருக்கும். சென்னைக்கு நேரடியாக புயலால் பாதிப்பு இருக்காது. இனிமேலும், புயல் திசை மாறக்கூடிய வாய்ப்பு குறைவு. கடந்த 24 மணி நேரமாக புயல் குறைந்த வேகத்தில்தான் நகர்ந்துக்கொண்டு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.