Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் என்னென்ன கட்டுப்பாடுகள்? முதல்வருக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளின் விபரங்கள்!

Written By siva
Updated: செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:16 IST)
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்து நெருங்கி வரும் நிலையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் என்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் இந்த ஆலோசனையின் போது முதல்வருக்கு சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
அது மட்டுமின்றி தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்தவும் சுகாதாரத் துறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தவும் சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மேலும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை மூடவும், கடைகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கவும் முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது இது குறித்த விரிவான அறிவிப்பு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
 
 
 

எல்லாம் காட்டு

அபிஜீத் தீப்கே போல என் குழந்தைகள் வளரவேண்டும்!.. நீட் போராட்டத்திற்கு ஜோதிகா ஆதரவு...

Sorry சொன்னா போதுமான்னு கேட்ட விஜய் எப்போது வாயை திறப்பார்?!. ஸ்டாலின் கேள்வி!..

அதிமுக ஆட்சியமைக்க விஜயிடம் ஆதரவு கேட்டோம்!. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!..

323 மில்லியன் வியூஸ்!.. நீட் தொடர்பாக மோடி வெளியிட்ட வீடியோ செம வைரல்!..

தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?!... ஒன்றிய அரசு இன்று முடிவு!...

அடுத்த கட்டுரையில்
Show comments