செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2024 (09:31 IST)

ஆயுத பூஜை லீவுக்கு ஊருக்கு செல்ல திட்டமா? இன்று முதல் ரயில் முன்பதிவு தொடக்கம்..!

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்லும் நிலையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை விடுமுறைக்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ள நிலையில் ஆயுத பூஜை விடுமுறைக்கு டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆயுதபூஜை அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை, 12ஆம்  தேதி சனிக்கிழமை விஜயதசமி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதை அடுத்து பொதுமக்கள் இந்த விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயுத பூஜைக்கு அக்டோபர் 9ஆம் தேதியே ஊருக்கு செல்ல திட்டமிடுபவர்கள் இன்று அதாவது ஜூன் 11ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஊருக்கு செல்பவர்கள் நாளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், 11 ஆம் தேதி ஊருக்கு செல்வார் நாளை மறுநாள் முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva