செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூன் 2024 (08:42 IST)

விகே பாண்டியனின் ஐஏஎஸ் மனைவி விடுப்பில் சென்றார்.. 6 மாத காலம் விடுமுறையா?

ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களின் வலது கையாக இருந்த விகே பாண்டியன் திடீரென தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா கார்த்திகேயன் என்பவர் ஆறு மாத விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மிஷன் சக்தி துறையில் சுஜாதா கார்த்திகேயன் இருந்து வந்த நிலையில் பிஜு ஜனதா தளத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டது. மேலும் பிஜு ஜனதா தள கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் கடன் கொடுக்க மாட்டோம் என மகளிர் சுய உதவி குழுக்களை அவர் மிரட்டியதாகவும் குற்றம் காட்டப்பட்டது.

இது குறித்து ஏற்கனவே பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் கடந்த மே இரண்டாம் தேதி சுஜாதாவை வேறு துறைக்கு மாற்றியது. இந்த நிலையில் தற்போது திடீரென அவர் ஆறு மாதம் விடுப்பில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தனது மகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத போவதாகவும் தனது மகளின் படிப்பை கவனித்துக் கொள்வதற்காக ஆறு மாத விடுப்பில் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் வீட்டில் இல்லை என்றும் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva