1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 மே 2024 (10:37 IST)

லீவ் கேட்ட காவலரிடம் பெண் செட்டப் செய்ய சொன்ன காவல்துறை அதிகாரி.. புதுவையில் அதிர்ச்சி..!

உயர் அதிகாரியிடம் காவலர் ஒருவர் லீவு கேட்டபோது என் மனைவி ஊரில் இல்லை எனவே எனக்கு ஒரு பெண் செட்டப் செய்து கொடுத்து விட்டு லீவுக்கு போ என்று கூறிய ஆடியோ   புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
புதுச்சேரியில் உதவி சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வரும் சந்திரன் என்பவர் உயர் அதிகாரிக்கு போன் செய்து தனக்கு விடுமுறை வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அப்போது தனது மனைவி ஊரில் இல்லை என்றும் அதனால் பெண் யாரையாவது ரெடி செய்து அனுப்பி விட்டு அதன் பிறகு லீவு எடுத்துக் கொள் என்று கூறியதாக ஒரு ஆடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
அந்த வீடியோ ஆடியோவில் அவர் பீஸ் ஒன்று கொண்டு வா என்று காவல்துறை உயர் அதிகாரி கூற, சந்திரன் ஃபிஷ் என்று நினைத்துக் கொண்டு மீன் வேணுமா சார் என்று கேட்டபோது அந்த உயர் அதிகாரி நீ வாட்ஸ் அப் காலில் வா என்று கூறுவதுடன் அந்த ஆடியோ முடி வருகிறது.
 
இதனை அடுத்து சந்திரனின் மனைவி ஆர்த்தீஸ்வரி என்பவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran