பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஜனவரி 14, 15 ஆகிய நாட்களில் பொதுமக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என ஜனவரி 8ஆம் தேதி அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று முதல் 2100 அரசு விரைவு பேருந்துகள், 4,76 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் மூன்று நாட்களில் 11,006 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை நெல்லை உள்பட முக்கிய நகரங்களுக்கு இந்த பேருந்துகள் செல்லும் என்பதும் சென்னையில் இருந்து மட்டுமின்றி பிற இடங்களில் இருந்தும் 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மொத்தத்தில் பொங்கல் விழாவிற்காக 19,484 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், கேகே நகர், தாம்பரம் சானிடோரியம், பூந்தமல்லி பைபாஸ், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என்று குறிப்பிடத்தக்கது
Edited by Siva