இன்று முதல் பொங்கல் பரிசு ரூ.1000 வினியோகம்.. தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!
இன்று முதல் பொங்கல் பரிசு மற்றும் ரூபாய் 1000 விநியோகம் செய்யப்பட இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக ரேஷன் கடைகளில் பொங்கலுக்கு தேவையான அரிசி சர்க்கரை கரும்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 ரொக்கத் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்
அந்த வகையில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தமிழக முதல்வர் சென்னையில் தொடங்கி வைக்க உள்ளதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைக்க உள்ளனர்.
ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் கரும்பு ஆகியவற்றை இன்று முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் கடந்த சில நாள்களாக வினியோகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva