1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (13:52 IST)

பிப்ரவரி 24 முதல் தொடங்குகிறது அதிமுகவின் அதிகாரபூர்வமான நாளேடு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் அதிகாரபூர்வமான நாளேடாக 'நமது எம்ஜிஆர். இருந்தது. அதேபோல் அதிகாரபூர்வமான தொலைக்காட்சியாக ஜெயா டிவி இருந்தது.
 
ஆனால் தற்போது நமது எம்ஜிஆர், ஜெயா டிவி இரண்டுமே தினகரன் வசம் இருப்பதால் அதிமுகவுக்கு என தனி நாளேடு மற்றும் தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்படும் என சமீபத்தில் அதிமுக தலைமை அறிவித்தது
 
இந்த நிலையில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த தினம் முதல் அதிமுகவின் அதிகாரபூர்வமான நாளேடாக 'நமது அம்மா' என்ற நாளிதழ் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நமது எம்ஜிஆர் நாளேடுக்கும், நமது எம்ஜிஆர் நாளேடுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் 'அம்மா டிவி' என்ற தொலைக்காட்சியும் தொடங்கப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.