1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 13 டிசம்பர் 2023 (20:30 IST)

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன்கள் ! புதிய அறிவிப்பு

bus
மாநகர போக்குவரத்துக் கழக அடையாள அட்டை புதுப்பித்தல், புதிதாக வழங்குதல், இணைப்பில் உள்ள 40 மையங்களில் வரும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 31 -2024  வரை காலை 8 மணி முதல் இரவு 7-30 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில், சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதுப்பித்தல்/ புதிதாக வழங்குதல் குறித்த அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரை பயன்படுத்தக் கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும்  அடையாள அட்டை புதுப்பித்தல், புதிதாக வழங்குதல், இணைப்பில் உள்ள 40 மையங்களில் வரும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 31 -2024  வரை காலை 8 மணி முதல் இரவு 7-30 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.