வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 13 ஜூலை 2019 (19:35 IST)

ஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணினி - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழக பள்ளிக் கூடங்களில் உள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பாடத்திட்ட புத்தகத்தில் உள்ள க்யூ ஆர்கோடு, மற்றும் இணையதளத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு அனுப்ப வகையில், உயர் நிலை வகுப்புகளின் ஆசிரியர்களுக்கு  இலவச மடிக்கணிணிகளை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இதுசம்பந்தமாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : மாவட்டத்தில் உள்ள மேல்நிலை வகுப்பறைகளின் எண்ணிக்கையின் அடிப்படையாகக் கொண்டு, உடனடியாக இலவச மடிக்கணினிகளை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
கற்பித்தலுக்கு மட்டுமே இந்த மடிக்கணினிகளை  பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்வி இயக்குநர், இணை இயக்குநர், இயக்கக அலுவலர்கள் 33 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் இலவச மடிக்கணினிகளை வழங்குமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.