புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (18:28 IST)

பிளாஸ்டிக் குப்பைக்கு இலவச உணவு : அரசின் திட்டத்துக்கு மக்களிடம் மவுசு

இன்றைய உலகில் உள்ள முக்கியமான பிரச்சனைகளில் அதிமுக்கியமான ஒன்று பிளாஸ்டிக் பொருட்கள்தான். நாம் இப்போது உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட அவை மண்ணில்  மக்காது என்பதால் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஐநா சபை முதற்க்கொண்டு பலநாடுகள் இறங்கியுள்ளன.
இந்நிலையில் சத்தீஸ்கரில் பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு வந்து வழங்குபவர்களுக்கு உணவு வழங்கும் நடைமுறை வழங்கும் புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
 
அம்மாநிலத்தில் குப்பைகளை அகற்ற அம்பிகாபூர் மாநகராட்சி சார்பில் கார்பேஜ் காஃபே திறக்கப்படுகிறது.இந்நிலையில் அங்கு ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பையைக் கொண்டு வந்துகொடுக்கும் குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று மேயர் அஜய்டிக்ரே தெரிவித்துள்ளார்.
 
மேலும், இந்த திட்டத்தின் மூலமாக நகரம் குப்பையற்று தூய்மையாக இருக்கும் என்றும், சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.