1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 மே 2023 (09:25 IST)

தங்கை மேல் தவறான காதல்.. தட்டிக்கேட்ட தந்தைக்கு துப்பாக்கிச்சூடு! – வளர்ப்பு மகன் தலைமறைவு!

விழுப்புரம் மாவட்டத்தில் மகனாக நினைத்து வளர்த்த இளைஞர் தனது தங்கை முறை பெண் மேல் காதல் கொண்டு வளர்ப்பு தந்தையை சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். சொந்தமாக நிலம் வைத்துள்ள கோவிந்தன் விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பாரதி என்பவர் சிறு வயதிலேயே தாயை இழந்தவர்.

ஆதரவற்ற பாரதியை கோவிந்தன் குடும்பத்தினர் மகனாக நினைத்து வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில்தான் பாரதிக்கு கோவிந்தனின் மூத்த மகள் மேல் காதல் உண்டாகியுள்ளது. இதையடுத்து கோவிந்தனிடமே பெண் கேட்டு சென்றுள்ளார் பாரதி. ஆனால் அதற்கு கோவிந்தனும், அவர் வீட்டாரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாரதி தான் பன்றி வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியை கொண்டு கோவிந்தனையும், அவரது மனைவியையும் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். சுடப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரதியை தேடி காட்டிற்குள் சென்ற அதிகாரிகளையும் பாரதி சுட்டு விடுவேன் என மிரட்டி தப்பி ஓடியுள்ளார். அவரை தேடும் பணியில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K