1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2018 (12:41 IST)

சென்னையில் வீட்டு உரிமையாளரை கொடூரமாக கொலை செய்த வளர்ப்பு நாய்கள்!

சென்னை ஆவடியில் உள்ள கோவர்த்தனகிரியில் வீட்டு உரிமையாளரையே வளர்ப்பு நாய்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனிதர்கள் செல்லமாக வளர்கும் நாய்கள் சில நேரத்தில் அவர்களுக்கு எமனாகி விடுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு வேலூரில், ரோட்வீலர் வகை நாய்கள் தாக்கியதால் நாயின் உரிமையாளர் கிருபாகரன் உயிரிழந்தார். அதே போல் அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 ராட்வீலர் நாய்கள் அதன் உரிமையாளரை கடித்துக் கொடூரமாக கொன்றது.சில நாடுகளில் ராட்வீலர் வகை நாய்கள் ஆபத்தானது என தடை செய்யப்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து சென்னை ஆவடியில் உள்ள கோவர்த்தனகிரியில் சந்தோஷ் என்பவர் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் இரண்டு ராட்வீலர்(ROTTWEILER) வகை நாய்களை தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார். சந்தோஷின் தாயார் கௌரி (68), வியாழக்கிழமை இரவு வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கே இருந்த ரோட்வீலர் நாய்கள் அவரைத் தாக்கியுள்ளன. இந்தத் தாக்குதலில் கெளரியின் முகத்தை கிழித்தும் கடித்தும் அவரைக் கொடூரமாகக் கொன்றுள்ளன.
 
இதையடுத்து, காலை 6 மணியளவில் மொட்டை மாடியில் கௌரி ரத்த வெள்ளத்தில் கொடூரமான முறையில் இறந்து கிடப்பதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.