புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 9 மே 2018 (10:59 IST)

கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் - விவசாயிகள் அறிவிப்பு

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிடில் தற்கொலை போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபின்பும், கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அதேபோல், தமிழகத்திற்கு 4 டி.எம்.சி நீரை உடனடியாக தரவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு, கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட முடியாது என கைவிரித்து விட்டது.
 
இது தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கர்நாடக தேர்தலை காரணம் காட்டி மத்திய அரசு கால அவகாசம் கேட்டது. இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு இந்த வழக்கை வருகிற 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
 
இந்நிலையில் இதுபற்றி விவாதிக்க திருச்சியில் விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வருகிற மே 15ம் தேதி கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் நடத்துவோம் எனவும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.