திமுகவுக்கு சனி பிடித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
திமுகவிற்கு தற்போது சனி பிடித்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமானது என்று கூறப்படும் ஜிஸ்கொயர் நிறுவனத்தில் தற்போது வருமானவரித்துறை என சோதனை நடத்தி வருகின்றனர்
அது மட்டும் இன்றி திமுக எம்எல்ஏ மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோரது இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் என சோதனை நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவினருக்கு சனி பிரிந்துள்ளது என்று தெரிவித்தார். முன்பு 2ஜி வழக்கு இப்போது ஜி ஸ்கொயர் வழக்கு என்றும் அவர் இது கேள்விக்கு பதில் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran