முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எஸ்பி வேலுமணி, சி விஜயபாஸ்கர், கேசி வீரமணி, தங்கமணி ஆகியோர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்துள்ள நிலையில் சோதனையிடப்படும் 6வது நபர் அமைச்சர் அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, தருமபுரி உள்ளிட்ட முன்னாள் உயர் கல்வித்துறை கேபி அன்பழகன் மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்து தற்போது சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.