வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (11:52 IST)

ஆயுத பூஜையால் பூக்கள் விலை உயர்வு! – பொதுமக்கள் அதிர்ச்சி!

ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி பூக்கள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளை ஆயுதபூஜையும், அடுத்த நாள் விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. ஆயுத பூஜை அன்று அனைத்து பணி செய்வோரும் தங்கள் தொழில் சாதனங்களை சுத்தப்படுத்தி வழிபடுவது வழக்கம். இதனால் ஆயுத பூஜையில் பூக்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.

அதேசமயம் பூக்கள் விலையும் வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை கிலோ ரூ.300க்கு விற்றுவந்த மல்லிகை தற்போது கிலோ ரூ.800 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ.400ல் இருந்து ரூ.1000 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. அதேபோல செவ்வந்து பூ கிலோ ரூ.100 ரூபாயில் இருந்து ரூ.400 ஆகவும், ரோஜா பூ ரூ.80ல் இருந்து ரூ.280 ஆக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.