Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி விமான நிலையத்தில் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு கிளம்பிய விமானத்தால் பரபரப்பு

Updated: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (07:40 IST)
திருச்சி விமான நிலையத்தில் சுற்று சுவரை உடைத்து கொண்டு விமானம் ஒன்று பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.20 மணிக்கு திருச்சியிலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானியின் கட்டுப்பாட்டை மீறி அந்த விமானம் விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு மேலே பறந்தது.

130 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் சுமார் 4 மணி நேர பயணத்திற்கு பின்னர் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதனையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த விமானம் திடீரென கோளாறு ஏற்பட்டது ஏன்? என்று விரிவான விசாரணை நடத்த விமான நிலைய உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்த 130 பயணிகளுக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

நீரை தேக்கிவச்சா வெள்ளத்துல அடிச்சிக்கிட்டு போய்விடுவோம்!.. டி.கே.சிவக்குமார் கோரிக்கை!...

ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம்!.. டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!..

உண்மை தெரியாம தப்பா பேசுறாங்க!.. குடும்பம் பற்றி பேசும் ஜேசன் சஞ்சய்...

கர்நாடகாவில் கனமழை!.. நிரம்பும் அணைகள்!.. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுமா?..

இனிமே இளைய கலைஞர்!.. உதயநிதியை முன்னிருத்தும் திமுக!..

அடுத்த கட்டுரையில்
Show comments