வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (15:37 IST)

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலைக்கு... உண்ணாவிரதப் போராட்டம்

சிறைபிடிக்கப்பட்ட 55  மீனவர்களை விடுதலை செய்ய கோரி நாளை மறுநாள் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம். 

 
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தனுஷ்கோடி - நெடுந்தீவு இடையே, ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், அத்து மீறி மீன் பிடித்ததாக மீனவர்கள் பேரை கைது செய்ததாக கூறப்படுகிறது.
 
கைது செய்யப்பட்டுள்ள தமிழக யாழ்ப்பாணம் சிறையில் உள்ளனர். இதேபோல், மண்டபம் பகுதியில் இருந்து நேற்று சென்ற 12 மீனவர்களையும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை படை கைது செய்த 55 மீனவர்களை விடுவிக்க கோரி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியது. 
 
அதன்படி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55  மீனவர்களை விடுதலை செய்ய மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.