புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2019 (18:56 IST)

புற்று நோய், தோல் நோய்கள் ஏற்படக் காரணமான மீன்கள்... அதிர்ச்சி தகவல் !

புற்றுநோய், தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருத்தப்பட்டு தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்கள் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள  ஆப்ரிகன் கெளுத்தி மீன்கள் ஒசூர் பகுதியில் வளர்க்கப்பட்டு சட்டவிரோதமாக விற்கப்படுவதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
 
இந்த ஆப்ரிகன் கெளுத்தி மீன்களை சாப்பிட்டால் புற்று நோய்கள், தோல் நோய்கள் ஏற்படுவதாகவும், இந்த மீன்களை வளர்ப்பதற்க்க இறைச்சி மற்றும் கோழிக் கழுவுகளைப் பயன்படுத்துவதால் அந்த பகுதிகள் அதிக துர் நாற்றம் வீசுவதாகவும் புகார் எழுந்தது.

இதனையடுத்து, ஒசூரில் பத்தளப்பள்ளியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்தப்பட்ட இருந்த ஆப்ரிகன் கெளுத்தி  மீன்களை வருவாய்துறையினரால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
 
இந்த ஆப்ரிகன் கெளுத்தி மீன்கள் சுமார்  10 கிலோ எடை வளரும் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.