பைக்கை ரோட்டில் போட்டு ஓடிய வாலிபர்: சூப்பர் ஹீரோவாக மாறி போலீஸ் செய்த காரியம்
சென்னை சோழிங்கநல்லூரில் பைக் தீப்பற்றி எரிந்ததால் பைக்கை ஓட்டி வந்த வாலிபர் அதிர்ச்சியடைந்து ஓட்டம்பிடித்தார்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்த சுபாஷ் என்ற மாணவன் செம்மஞ்சேரியில் உள்ள கல்லூரிக்கு தனது பைக் மூலம் சென்றார். சோழிங்கநல்லூர் அருகே சென்ற போது திடீரென அவர் பைக் திப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக அந்த வாலிபர் பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடினார்.
அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் பிரகாஷ் என்பவர் தைரியமாக பைக் அருகே சென்று தீயை அணைத்தார். இந்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
விசாரணையில் பைக் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக தெரிகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியே சற்றுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.