புதன், 30 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 30 அக்டோபர் 2024 (10:27 IST)

இலவச பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு ரூ.200 அபராதம்.. கண்டக்டர் ஜிபேவுக்கு அனுப்பியது ஏன்

fine
பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டாகிய நிலையில், பேருந்து பயணம் செய்த பெண்ணுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து, பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பு வெளியானது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக மகளிர்கள் சில குறிப்பிட்ட பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் இலவச பேருந்தில் பயணம் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்காக 200 ரூபாய் அபராதம் செலுத்தியதாகவும், இலவச பேருந்தாக இருந்தாலும் டிக்கெட் எடுக்க வேண்டும், இலவச டிக்கெட்டை எடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று செக்கிங் இன்ஸ்பெக்டர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த அபராதத்தை கண்டக்டரின் மொபைல் போனுக்கு ஜிபே மூலம் அனுப்பியதாகவும், தான் அனுப்பிய பணத்துக்கு எந்த விதமான ரசீதும் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இது குறித்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Edited by Mahendran