1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஜூலை 2018 (11:50 IST)

திருநங்கைகளுக்குள் மோதல் : கலவரமானது கரூர் (வீடியோ)

திருநங்கைகளுக்குள் ஏற்பட்ட மோதல் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கரூர் நகரில், மாவடியான் கோயில் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் திருநங்கைகள் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதேபோல், மாயனூர் பகுதியை அடுத்த மணவாசி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்த புதிய திருநங்கைகளுக்கும், ஏற்கனவே மணவாசி பகுதியில் தங்கி இருக்கும் திருநங்கைகளுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
 
திருநங்கைகள் அணி, அணியாக பிரிந்துள்ளதோடு, கரூருக்கு வந்த புதிய திருநங்கைகள், பழைய திருநங்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை தரவேண்டுமென்றும் நிர்பந்திப்பதாகவும், அதை மறுத்த கரூர் நகரில் வசிக்கும் திருநங்கைகள் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் பிரித்திவிராஜிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த வித பயனுமில்லை எனத் தெரிகிறது.
 
இநிலையில், கரூரில் உள்ள அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அலுவலகத்தை ஒரிரு தினங்களுக்கு முன்னர் சில திருநங்கைகள் முற்றுகையிட்டனர். ஆனால் முற்றுகையிட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததற்காக, மற்ற திருநங்கைகள் தாக்கியதாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் அன்றிலிருந்து இன்று வரை கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
 
ஆனால் இன்று மாலை, மற்ற திருநங்கைகள் கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் பிரித்திவிராஜ், விசாரணைக்காக அழைத்துள்ளார் என்றும், அதற்காக நீங்கள் (மற்ற திருநங்கைகள்) வரவேண்டுமென்றும் கட்டாயபடுத்தி, மருத்துவமனைக்கு சென்று அழைத்துள்ளதோடு, அவர்களுக்கு குளுக்கோஸ் இறங்கி வருவதாகவும், பிறகு வருவதாக கூறி சொன்னதற்கு, அவர்கள் ஆவேசப்பட்டு, உடனே, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அடித்து கண்ணாடியை உடைத்துள்ளனர்.
 
ஆகவே, கோஷ்டி பூசலாக ஏற்பட்ட திருநங்கைகளின் பிரச்சினை மருத்துவமனையில் கலவரமாக மாறியதோடு, அங்கேயே தள்ளுமுள்ளுவாக மாறியுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த திருநங்கைகள் கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் பிரித்திவிராஜை கண்டித்து மருத்துவமனையிலேயே கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவத்தினால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
மேலும், கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர், ஏற்பட்ட தகராறு அப்போதே, கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் பிரித்திவிராஜ், இந்த பிரச்சினையை தீர்த்திருந்தால், இந்த அளவிற்கு கலவரம் ஏற்பட்டு இருக்காது என்கின்றனர் நடுநிலையாளர்கள். இந்த மருத்துவமனையில் கலவரத்தினையடுத்து செவிலியர்கள், மருத்துவர்கள் மட்டுமில்லாது நோயாளிகளும் அவர்களோடு உள்ள பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
 
பேட்டி : சுஜாதா – திருநங்கை 
நபிதா நாயக் – பாதிக்கபட்ட திருநங்கையின் ஜமா அத் தலைவி
ருத்ராதேவி – பாதிக்கப்பட்டு தாக்குதலுக்குண்டான திருநங்கை