1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 15 டிசம்பர் 2021 (08:01 IST)

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கும் அதிமுகவின் 5வது முன்னாள் அமைச்சர்!

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் இன்று காலை ஆறு முப்பது மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்
 
சென்னை உள்பட 69 இடங்களில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்ட தங்கமணி வீடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த சோதனையில் ஏராளமான லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர்களது பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனைக்கு உள்ளாகும் ஐந்தாவது அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், கேசி வீரமணி மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது