தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு தாலி கட்டிய குடும்பத்தினர் – வேலூரில் பரபரப்பு!
வேலூரில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் உள்ள விருத்தம்பட்டு காவல்நிலையத்துக்கு தனியாக வந்த 15 வயதாகும் 10 ஆம் வகுப்புப் படிக்கும் சிறுமி, சொன்ன தகவல்கள் போலிஸாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளன. அவர் சொன்ன தகவலின் படி அவரது பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு சிறுமி மறுத்துள்ளார்.
அதனால் அவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது வலுக்கட்டாயமாக கையைப் பிடித்துக்கொண்டு தாலிக் கட்ட வைத்துள்ளனர். இதையடுத்து மறுநாள் காலை வீட்டை விட்டு ஓடிய அவர், விருத்தம் பட்டு காவல்நிலையத்துக்கு வந்துள்ளார். இதனை அடுத்து போலிஸார் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் அளித்தார்கள். அவர்கள் அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
மேலும் போலிஸார் சிறுமியின் பெற்றோரிடம் கட்டாயத்திருமணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.