திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (12:33 IST)

மனைவியுடன் தகராறில் 3 மாத குழந்தையை சுவரில் அடித்து கொன்ற தந்தை

திருவாரூர் அருகே மாதவன் என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபத்தில் தன்னுடைய 3 மாத குழந்தையை சுவரில் வீசி எரிந்துள்ளார். இதனால் அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.


 
 
திருவாரூர், அன்னுக்குடி பகுதியை சேர்ந்த மாதவன், வைஷ்ணவி தம்பதியினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அம்மா வீட்டில் இருந்த வைஷ்ணவியிடம், மாதவன் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் வைஷ்ணவியிடம் இருந்த 3 மாத குழந்தை ரோஹித்தை பறித்து சுவற்றில் வீசியுள்ளார் மாதவன்.
 
தந்தையால் சுவற்றில் தூக்கி வீசப்பட்ட 3 மாத குழந்தை ரோஹித் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாதவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.