ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (18:26 IST)

10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அப்பா கொடுத்த பாலியல் தொல்லை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு அவருடைய அப்பாவே பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி சிறுமியின் காதலன் மற்றும் அவருடைய நண்பரும் பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து மூன்று பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

வடசென்னையை சேர்ந்த 15 வயது 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை காணவில்லை என அவரது அம்மா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் இது குறித்து விசாரித்த போது செங்கல்பட்டில் சிறுமியின் காதலன் வீட்டில் இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து சிறுமியை மீட்ட போலீசார் காதலனை கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு காதலனின் நண்பனும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரியவந்ததை அடுத்து அவரையும் கைது செய்தனர்.

இதனை அடுத்து சிறுமியிடம் விசாரணை செய்தபோது தன்னுடைய அப்பா பல ஆண்டுகளாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திடுக்கிடும் உண்மையை கூறியதை அடுத்து அவருடைய அப்பாவையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெற்ற அப்பாவே பாலியல் தொல்லை செய்ததால் தான் தன்னை காதலிப்பதாக கூறிய காதலன் உடன் சிறுமி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva