செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (17:41 IST)

மகளை பாலியல் தாக்குதல் செய்து சீரழித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து  வரும் கோபால் மகன் மகேந்திரன் வயது 43 என்பவர் சமையல் மாஸ்டர் வேலை செய்து வந்தார் மகேந்திரன் அவரது மனைவியை கொடுமைப்படுத்தியதால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு அவரது சகோதரி வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் 13 .03. 2022 ஆம் தேதி இரவு தமது 13 வயதான மகளை மகள் என்றும் பாராமல் பாலியல் தாக்குதல் நடத்தி சீரழித்துள்ளார் தொடர்ந்து நான்கு நாட்கள் தந்தையால் சீரழிக்கப்பட்ட சிறுமி தனது தாய்க்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரில் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து காப்பாற்றும் சட்டத்தின்(போக்ஸோ) இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் வழக்கை நடத்தினார் வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி மகேந்திரனுக்கு இரண்டு பிரிவுகளின் கீழும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல்சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.