திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (23:31 IST)

வீட்டில் நிறுத்தப்பட்ட வாகனத்திற்கு ஃபாஸ்டேக் கட்டணம் வசூல்!

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு ஃபாஸ்டேக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடியில் பயணம் செல்லுபவர்கள் ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

அதன்படி, பெரும்பாலான மக்கள் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை தங்கள் வாகனங்களில் ஒட்டினார்கள்.

இந்நிலையில், மானாமதுரை அருகே ராஜகம்பீரம் பகுதியில்  வசித்து வந்த ஒருவர் தனது காரை வீட்டில் நிறுத்தி வைத்திருந்த நிலையிலும் அவரது வாகனம் திருப்பாச்சேத்தி சுங்கச் சாவடி வழியாக மதுரை சென்றதாகக் கூறி ஃபாஸ்டேக் மூலம் வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இப்பிரச்சனைகளையும்தொழில் நுட்பக் கோளாறுகளையும் சரிசெய்ய வேண்டுமனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.