திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (12:37 IST)

கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்கள்: முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்கள் தள்ளுபடி என அதிரடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார்.
 
கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை எழுந்து வருகிறது. அடுத்தடுத்த புயல்கள் உள்பட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை திமுக உள்பட அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.
 
மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாய கடன்கள் தள்ளுபடி என அறிவித்துள்ளார். இதனை அடுத்து விவசாயிகள் சார்பில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன