1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 31 ஜூலை 2018 (21:16 IST)

கருணாநிதி பற்றி கனிமொழி பெயரில் பரவும் வதந்திகள்!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 
தமிழக அரசியலில் மூத்த தலைவர் என்பதால் பலர் அரசியல் கட்சி தலைவர்களும் பிரமுகர்களும் அவரை சந்தித்து செல்கின்றனர். இந்நிலையில், கருணாநிதியை சந்திக்க வருபர்களை குறித்து கனிமொழி பெயரில் வதந்திகள் பரப்பட்டு வருகிறது. 
 
அதாவது, எந்த ஆன்மீக தலைவரும் எனது தந்தையை பார்க்க வரக்கூடாது. அர்ஜுன் சம்பத் கொண்டுவந்த பிரசாதத்தை நான் குப்பை தொட்டியில் வீசிவிட்டேன் என்பது போன்ற பதிவுகள் வெளியாகின்றன. 
 
இந்நிலையில், திமுக சார்பில் செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான, செல்வநாயகம் இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.