திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜூன் 2024 (17:02 IST)

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரம்: சாராய வியாபாரி கைது என தகவல்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் ஏற்கனவே 8 பேர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 7 பேர் என மொத்தம் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களின் உடல்கள் காவல் துறையினரால்  மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் உடற்கூராய்வின் முடிவில் தான் இறப்புக்குரிய காரணம் தெரிய வரும் என கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களுக்கு முதலில் காது கேட்காமல் போனதாகவும், அடுத்து கண் பார்வை பறிபோனதாகவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
அரசு தரப்பில் இணை நோய் காரணமாக  உயிரிழப்பு என்று கூறிய நிலையில், சிலருக்கு எந்தவித நோய்களும் இல்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரி  கண்ணுக்குட்டி என்கிற தாமோதரன் கைது என தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் புதுச்சேரி, சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் என்றும், 30-க்கும் மேற்பட்டோர் வயிற்று வலி, தலைவலி என சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran