வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 டிசம்பர் 2018 (13:32 IST)

தினகரன் தவிர அனைவரையும் ஏற்று கொள்ள தயார்: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவின் ஒரு பிரிவாக தினகரன் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அவருடைய கூடாரம் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி திமுக இணையவிருப்பதாக கூறப்படும் நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற எம்.எல்.ஏக்களும் மீண்டும் அதிமுகவில் இணைய தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்  தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என இன்று சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.  இதனால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதன் மூலம் தினகரனை தனிமைப்படுத்திவிடலாம் என்பதுதான் அதிமுகவின் திட்டம் என்றும், அந்த திட்டம் நிறைவேறினால் தினகரனின் நிலைமை சிக்கலாகும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.