செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (13:05 IST)

நடிகையை ஏமாற்றிய மணிகண்டன் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக தகவல்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி, அடித்து காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் அனுமதியில்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல், ஆகிய ஐந்து பிரிவின் கீழ் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும் தான் நிரபராதி என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால், மணிகண்டன் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது உதவியாளர் செல்போன் மூலம் மற்றவர்களிடம் மணிகண்டன் பேசி வருவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.