தேமுதிக, சீமான் கட்சிகளை போட்டியாகவே கருதவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வியாழன், 9 பிப்ரவரி 2023 (10:25 IST)
தேமுதிக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சியை ஒரு போட்டியாகவே நான் கருதவில்லை என திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். 
 
அதிமுக எங்களுக்கு போட்டி இல்லை என்றும் மக்களிடம் இரட்டை இலையின் தாக்கம் இருப்பதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு வெள்ளோட்டமாக இந்த இடைத்தேர்தல் அமையும் என்றும் தேமுதிக நாம் தமிழர் கட்சியை போட்டியாகவே கருதவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
 சீமான் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை என்றாலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவர் நிலைப்பாட்டை மாற்றுகிறார் என்றும் நிலையற்று பேசுவதால் சீமான் பேச்சை பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். 
 
மதவாத கட்சியை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்றும் நான் களமிறங்க முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மேலிடம் விருப்பம் தெரிவித்ததால் மகன் விட்டு சென்ற பணிகளை தொடர களமிறங்கி உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

வீ த லீடர்ஸ்!.. நாளை பொள்ளாச்சியில் மாநாடு!.. களம் இறங்கிய அண்ணாமலை..

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை!. இன்றைய நிலவரம்....

இனிமே அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்தான்!.. ஒன்றிய அரசு அறிவிப்பு!...

1000 ஏவுகனை வச்சிருக்கோம்!.. ஈரானை அழிப்போம்!.. டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை....

திராணி இருந்தா நேரில் ஆஜராகணும் மிஸ்டர் க்ளீன்!.. செந்தில் பாலாஜிக்கு தவெக பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments