வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:28 IST)

ஈ வி கே எஸ் இளங்கோவனுக்குக் கொரோனா தொற்று!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இப்போது கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதில் சாதாரண மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் இப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 20 நாட்களுக்கு முன்னர் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசியை இவர் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.