புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 நவம்பர் 2018 (08:53 IST)

கல்யாணத்துக்கு வாங்க.. ஆனா மொய் வெக்கல அவ்ளோதான்: காட்டமான கல்யாண பத்திரிக்கை

கோவையில் திருமண வீட்டார் அளித்த பத்திரிக்கையில் கல்யாணத்திற்கு வருவோர் கண்டிப்பாக மொய் வைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள முத்தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவர்களுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
 
கல்யாணத்திற்காக முத்துச்செல்வன் அளித்த பத்திரிக்கையை பார்த்த அனைவருக்கும் ஷாக். வழக்கம் போல் ஆரம்பத்தில் குலதெய்வத்தின் பெயர், இரு வீட்டாரின் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மணமகன், மணமகள் பெயர், திருமண தேதி, இடம், மண்டபத்தின் பெயர் ,நேரம் என அனைத்தும் அச்சிடப்பட்டிருந்தது. இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இனிமேல் தான் விஷயமே இருக்கிறது.
 
அதற்கு கீழ் குறிப்பு என போட்டு "கடந்த 38 ஆண்டுகளில் நான் தங்கள் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய்யும் எழுதி உள்ளேன். 1980 முதல் இன்றுவரை என் குடும்பத்தில் இதுவே முதல் காரியம் என்பதால் தாங்கள் பெற்றுக் கொண்ட சீர் அல்லது மொய்யை கட்டாயம் மொத்தமாக செலுத்திவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதனால் பலர் திருமணத்திற்கே செல்லவில்லை என தெரிகிறது.