வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (13:31 IST)

நினைவில் வாழும் ப்ரவுனி! - தெருநாய்க்கு அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மக்கள்

ஈரோட்டில் இறந்துபோன தெருநாய் ஒன்றிற்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வைத்துள்ள பேனர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் உள்ள எஸ்கேசி ரோடு பகுதியில் தெருநாய் ஒன்று மக்களுக்கு விருப்பமாக இருந்து வந்துள்ளது. மூன்று தெரு மக்களிடம் மிகவும் அன்பாக பழகிவந்த அந்த நாய்க்கு ப்ரவுனி மற்றும் வெள்ளையன் என மக்கள் பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சில நாட்கள் முன்பு ப்ரவுனி இறந்த சம்பவம் தெரு வாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த ப்ரவுனியை நினைவு கூறும் விதமாக தெரு மக்கள் அதன் புகைப்படத்தோடு பேனர் அடித்து வீதியில் ஒட்டியுள்ளனர். தெரு நாய் ஒன்றின் மீது மக்கள் பாசம் கொண்டு பேனர் வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.