Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு மாவட்டத்தின் கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

Written By Sinoj
Updated: புதன், 11 ஜனவரி 2023 (17:18 IST)
திருமகன் ஈவேரா மறைவை ஒட்டி ஈரோடு மாவட்டத்தின் கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா   கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக  காலமானார்.

அவரது மறைவு ஆளுங்கட்சி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து சமீபத்தில். தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் விளக்கம் அளித்திருந்தார்.

அதில், ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் முறைப்படி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  திருமனன் ஈவேரா மறைவை ஒட்டி ஈரோடு கிழக்குத் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே  6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என தகவல் வெளியாகிறது.

எல்லாம் காட்டு

இண்டர்நெட் இல்லாமலே UPI-ல் பணம் அனுப்பலாம்!.. PhonePe புது ஆப் வந்தாச்சு!...

நேபாள வெள்ளம்!.. 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட 50 கோடி தங்கம்!...

இவரை பார்த்து கத்துக்கோங்க!.. சௌமியா அன்புமணிக்க்கு சட்டசபையில் கிடைத்த பாராட்டு!..

துயரத்திலும் மோசடி!.. நேபாள மக்களுக்கு உதவுவதாக போலி QR Code!.. மக்களே உஷார்!...

பாட்டிலுக்கு ரூ.10!.. நாங்க பண்ணா ஊழல்.. நீங்க பண்ணா நியாயமா?!.. சட்டசபையில் கே.என்.நேரு!..

அடுத்த கட்டுரையில்
Show comments