திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (19:35 IST)

ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை வெளிப்படுத்துங்கள்: ஊடகங்களுக்கு ஈபிஎஸ் வேண்டுகோள்..!

ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஆளுங்கட்சி இந்த தேர்தலில் பல முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு இடைத்தேர்தல் குளறுபடி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம் என்றும் மத்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர்களிடம் புகார் அளித்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
ஈரோடு பகுதியில் நடக்கும் குளறுப்படைகளை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்றும் அப்பொழுது தான் திமுகவின் உண்மையாக முகம் வெளியே தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 ஏழை மக்களுக்கு ஆசை காட்டி அவர்களை அழைத்துச் சென்று வாக்காளர்களை ஆடு மாடுகளை போல் அடைத்து வைப்பது ஜனநாயக படுகொலை என்றும் அவர் தெரிவித்தார் முத்துப்பிள்ளை
 
Edited by Siva