1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 15 ஜனவரி 2023 (18:02 IST)

கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

karur
கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம்  கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது..
 
விழாவில் தாந்தோணி வட்டாரக் கல்வி அலுவலர்கள் சகுந்தலா மற்றும் கௌரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்களுடன் உரையாடி  ஊக்கம் தந்தனர்...
 
புலியூர் தேர்வு நிலை பேரூராட்சியின் சார்பில் அதன் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை எழுத்தர் முருகேசன் துப்புரவு மேற்பார்வையாளர் பாஸ்கர் ஆகியோர்  இந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்ததோடு புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவோம் என்று மாணவர்களுக்கு நெகிழி மற்றும் டயர்களை எரிப்பதன் ஆபத்துக்களை எடுத்து கூறி மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்...
 
விழாவில் புலியூர் தேர்வு நிலை பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆவின்  கண்ணன் மற்றும் தங்கமணி செல்லமுத்து ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்..
 
விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அமுதாராணி.ஜூலிரீட்டாமேரி. தெரசாராணி ஜெயபாரதி மற்றும் மலர்விழி உடன் சத்துணவு பணியாளர்கள் ஜானகி பாக்கியலட்சுமி நவநீதா ஆகியோர் செய்து இருந்தனர்..
 
விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதோடு தேசிய அளவில் பதக்கம் பெற்ற மாணவி பூமிதாவுக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழங்கினர்..
 
விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் தலைமை ஆசிரியர் பரணிதரன் வரவேற்று நன்றி கூறினார்...