1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 3 ஜூலை 2022 (15:00 IST)

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் - ஈபிஎஸ் தரப்பு!

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி 11-ம் தேதி நடைபெறும் என்று பழனிச்சாமி தரப்பு கூறியுள்ளது. 

 
அதிமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் கூடியபோது அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழு கூட்டம் சிறிது நேரத்தில் முடிவடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அவை தலைவர் தமிழ்மகன் கூறியது ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இதனிடையே ஓபிஎஸ் தரப்பினர், அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை. தலைமை கழகம் அழைப்பு என்ற பெயரில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையதல்ல. பழனிச்சாமி தரப்பு சர்வாதிகார மனநிலையுடன் செயல்படுவதாக பன்னீர்செல்வம் தரப்பு குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி 11-ம் தேதி நடைபெறும் என்று பழனிச்சாமி தரப்பு கூறியுள்ளார். பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஆய்வுசெய்த பிறகு பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்த பின்னர் நந்தம் விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார்.  அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்வதற்கான தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளார்.