செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (12:10 IST)

மொத்த ஆதரவும் எனக்கே குடுங்க! கட்சிக்குள் ஆதரவு திரட்டும் எடப்பாடியார்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளருக்காக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கட்சியில் குழப்பங்கள் நிலவுவதால் வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் பணியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார்.

Edit by Prasanth.K